புதுடெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரக வளர்ச்சி துறையில் அரசு பணியை வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த பணமோசடியில் தொடர்புடைய ஊரக மேம்பாட்டு துறை அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் மற்றும் டெல்லி உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.