விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
விஷாலின் 33ஆவது படமாக உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
இந்தப் படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தில் ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு ஒரு லாரி காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது லாரி நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல், அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் சென்று மோதியது. அப்போது அங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் இருந்தனர்.
லாரி நிற்காமல் வருவதை பார்த்த தொழிலாளர்கள் இரண்டு புறமும் சிதறி ஓடினர். இதன் காரணமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாரி நிற்கவில்லை என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in