வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது.
நேபாளத்தின் பஜூரா என்ற இடத்தை மையமாக இன்று(பிப்.,22) மதியம் வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. டில்லி , என்சிஆர், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இதையடுத்து மக்கள் பாதுகாப்பு கருதி சாலையில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.
இலங்கையில் நிலநடுக்கம்:
இலங்கை புத்தலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement