நேர்மைக்கு உதாரணம் பாஜக! நேர்மையானவர்களின் பதவியை பறிப்பது காங்கிரஸ்? எஸ்.ஜெய்சங்கர்

புதுடில்லி: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் கட்சியில், தனது தந்தை டாக்டர் கே.சுப்ரமணியம் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ள விவகாரம் மிகப் பெரிய பேசுபொருளாகிவிட்டது. தனது தந்தையும் நாட்டுக்கு சேவையாற்றிவர் என்று கூறும் தற்போதைய மத்திய வெளியுறவு அமைச்சர, 2019ல் மத்திய அமைச்சராக வாய்ப்பு கிடைத்தது முதல், தனது தந்தையை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நீக்கியது தொடர்பாகவும் மனம் திறந்து பேசியுள்ளார்.

செய்தி நிறுவனம் ANI க்கு அளித்த பேட்டியில், ஜெய்சங்கர், ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக பணியாற்றிய தான், வெளிநாட்டு சேவையிலிருந்து அரசியலுக்கு வந்த பயணத்தைப் பற்றிப் பேசினார், மேலும் சிறந்த அதிகாரியாக இருக்கவு ஆசைப்படுவதாகக் கூறினார்.

ஜெய்சங்கர் ஜனவரி 2015 முதல் ஜனவரி 2018 வரை வெளியுறவு செயலாளராக இருந்தார், இதற்கு முன்பு சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியத் தூதராக பதவி வகித்தவர். தனது தந்தை 2011 இல் காலமானது தொடர்பாகவும், இந்தியாவின் மிக முக்கியமான தேசிய பாதுகாப்பு மூலோபாயவாதிகளில் ஒருவராக இருந்த  தந்தை கே சுப்ரமணியம் பற்றிய விஷயங்களையும் இந்திய வெளியுறவு அமைச்சர் மனம் திறந்து பேசினார். இந்தப் பேட்டி தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

“நான் சிறந்த வெளிநாட்டு சேவை அதிகாரியாக இருக்க விரும்பினேன். அதிகாரியாக இருந்த எனது தந்தை செயலாளராக ஆனார், ஆனால் அவர் செயலாளராக இருந்து நீக்கப்பட்டார் என்பதை அறிந்திருந்தேன். அந்த நேரத்தில் அவர் 1979 இல் ஜனதா அரசாங்கத்தின் இளைய செயலாளராக இருந்தார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்” என்று ஜெய்சங்கர் கூறினார். .

“1980ல், அவர் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்தார். 1980ல் இந்திரா காந்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் நீக்கிய முதல் செயலாளராக இருந்தது என் அப்பா தான். அனைவராலும் பாராட்டப்பட்ட, இன்றும் பாராட்டப்படும் அதிகாரி என் தந்தை கே சுப்ரமணியம்,” என்று தற்போதைய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். 

“என் தந்தை மிகவும் நேர்மையான நபர், அதுதான் பிரச்சனையை ஏற்படுத்தியதா என்பது எனக்குத் தெரியாது” என்றும் ஜெயசங்கர் கூறியது விவாதங்களின் அடிநாதமாக பார்க்கப்படுகிறது.

“அவர் அதன் பிறகு, மீண்டும் செயலாளராக மாறவில்லை. ராஜீவ் காந்தி காலத்தில் அமைச்சரவையில் ஆன அவரை விட இளைய ஒருவருக்காக அவர் மாற்றப்பட்டார். நாங்கள் அதைப் பற்றி அதிகம் பேசவில்லை என்றாலும், அதன் தாக்கம் மனதில் இருந்தது. எனவே எனது மூத்த சகோதரர் செயலாளராக ஆனபோது அவர் மிகவும் பெருமையாக உணர்ந்தார்” என்றார் டாக்டர் ஜெய்சங்கர்.

தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு அரசாங்கத்தின் செயலாளராக தான் ஆனதாகக் கூறினார். “அப்பா 2011 இல் இறந்துவிட்டார், அந்த நேரத்தில்,  நான் செயலாளர் ஆகவில்லை, அவர் இறந்த பிறகு, செயலாளர் ஆவதே என்னுடைய குறிக்கோளாக இருந்தது, நான் அந்த இலக்கை அடைந்த சமயத்தில் என் அப்பா உயிருடன் இல்லை. என் தந்தையின் ஆசையை நான் சரியாக நிறைவேற்றினேன், அதற்காக எனது நியாயமான பங்களிப்பைச் செய்து கொண்டிருந்தேன். அது, அவர்களுக்கு பிடித்திருந்தது. அதன் பின்னர் அரசியல் வாய்ப்பு வந்தது. நான் அதற்குத் தயாராக இல்லை…. அதனால் நான் அதைப் பற்றி சிந்தித்து முடிவெடுத்தேன்…,” என்று தனது குடும்பத்தைப் பர்றியும், அதிகாரியாக, நாட்டின் தூதுவராக பணியாற்றி, பிறகு அரசியலில் வந்த தனது பொதுவாழ்க்கைப் பயணத்தைப் பற்றி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விரிவாக பேசினார்.

2019 நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு பிரதமர் தொலைபேசியில் அழைப்பு விடுத்தது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாக குறிப்பிடும் ஜெய்சங்கர், “நான் உள்ளே நுழைந்தவுடன், எனக்கு பெரிய அளவில் நம்பிக்கையில்லை. நான் என் வாழ்நாள் முழுவதும் அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன். வெளிநாட்டுச் சேவையில் அது அதிகமாகவே தெரியும். அதிலும் வெளிநாட்டு அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நம் நாட்டு அரசியல்வாதிகளை வெளிநாட்டில் பார்ப்பதால் அவர்களை நெருக்கமாகப் அவதானிக்க முடியும். அரசியல்வாதிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவது, அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது என்ற நிலையில் இருந்து, அரசியலில் சேருவது, அமைச்சரவை உறுப்பினராவது, மாநிலங்களவை எம்.பியாவது என எதையும் நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று வெளியுறவு அமைச்சர் மனம் திறந்து பேசினார்.

அதில் அடிநாதமாக சொல்லப்பட்ட விஷயம், “காங்கிரஸ் ஆட்சியில் நேர்மையானவர்களுக்கு இறங்குமுகம், நேர்மைக்கு மதிப்பில்லை. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில், பிரபலமான முகமாக இல்லாவிட்டாலும், தகுதியும் திறமையும் இருந்தால் அமைச்சராக உயரலாம்” என்பதாகவே ஊகிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.