பால் அசோக்: ஆசிரியர் டூ வசூல் ராஜா… துர்கா ஸ்டாலின் உடன் சந்திப்பு- சவுக்கு உடைத்த சீக்ரெட்!

தமிழ்நாட்டில் ஆட்சியில் யார் இருந்தாலும் அதன் மூலம் ஆதாயம் அடையும் அதிகாரிகள் அதிகம் என்று ஊடகங்கள் அவ்வப்போது வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றன. அந்த வகையில் இணைய உலகில் பிரபல அரசியல் பார்வையாளராக விளங்கும் சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை கொளுத்தி போட்டுள்ளது. ஆசிரியர் பால் அசோக் என்பவர் கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரை பயன்படுத்தி கல்லா கட்டியவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி டீலிங்ஏனெனில் பால் அசோக், ராஜேந்திர பாலாஜி இருவரும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். தற்போதைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஆசிரியர் பணி பார்க்காமல் சென்னையில் வசூலை மட்டும் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இவர் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்துள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். இதுதொடர்பான பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
யார் இந்த பால் அசோக்?ஆசிரியர் பால் அசோக் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் கிருபா விஜய் ஆனந்த் விருதுநகர் பாலவநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவிக்கு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு கிடைத்த பதிலில், பால் அசோக் கடந்த 11.03.2010 அன்று பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
​​
ஆற்றிய பணிகள்அப்போது அவர் பெற்றிருந்த கல்வி தகுதிகள் எம்.ஏ பொருளியல், பி.எட் ஆகும். முதலில் மீசலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளர், வடமலைக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் உதவியாளர், விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தார். பின்னர் 8.2.2021 அன்று முதுகலை ஆசிரியராக பொறுப்பேற்றார்.
கல்வி தொலைக்காட்சியில் மாற்றுப் பணி26.02.2021ல் மேல்நிலைக் கல்வி இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவின் கீழ் சென்னை கோட்டூர்புரம் கல்வி தொலைக்காட்சியில் மாற்றுப் பணியில் Creation of Digital Content சார்பாக NEET/ IIT/ JEE பாடங்கள் படப்பிடிப்பு மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டார். ஆனால் 31.05.2021 வரை மட்டுமே மாற்றுப் பணி எனக் கூறப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து பணி நீட்டிப்புஇதன் தொடர்ச்சியாக 01.06.2021ல் பிறப்பிக்கப்பட்ட ஆணையில் கல்வி தொலைக்காட்சியில் கோவிட்-19 காலங்களால் ஆசிரியர்களுக்கு நிகழ்ச்சி தயாரிக்கும் பணி நடைபெற உள்ளதால் பால் அசோக் ஆசிரியரை 31.05.2022 வரை மாற்று பணிபுரிய ஆணை வழங்கி உத்தரவிடப்பட்டது. மேலும் 13.07.2022 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணையில் 01.06.2022 முதல் பால் அசோக் தொடர்ந்து மாற்றுப் பணியில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாற்று ஏற்பாடுஎனவே மாணவர்களின் நலன் கருதி கற்பித்தல் பணி தடைபடாமல் இருக்கும் வகையில் அருகில் உள்ள பள்ளியில் இருந்து தற்காலிகமாக ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். ஆசிரியர் பால் அசோக்கை 01.06.2022 முதல் பணி விடுவிப்பு செய்ய சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்துமாறு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கேட்டுக் கொள்ளப்பட்டது.
​​
துர்கா ஸ்டாலின் உடன் சந்திப்புஇதன்மூலம் தற்போது வரை தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி பணியில் ஆசிரியர் பால் அசோக் ஈடுபட்டு வருவது தெரியவருகிறது. இந்த சூழலில் சென்னையில் தங்கிய படி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை அவ்வப்போது சந்தித்து பேசியுள்ளார். இதன் விளைவாக வசூலை மட்டும் செய்து வருகிறார். சொத்துக்கள் பல கோடிகள் என்று சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுப்பாரா? இல்லை உண்மை நிலவரத்தை உலகிற்கு தெரியப்படுத்துவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.