மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் அல்லது டேப் வழங்க உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்ஜெட்டில் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரச ஆட்சி செய்து வருகிறது. யோகி ஆதித்ய நாத் முதலமைச்சராக உள்ளார். மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போது உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
பெரும்பாலும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். அதிலும் உத்தரப்பிரதேச மாநிலம் நாட்டின் மிகப்பெரிய மாநிலம் என்று காரணம் காட்டி அதிக நிதி ஒதுக்கப்பட்டுகிறது. இது ஒருபுறம் இருக்க, உத்தரப்பிரதேச பட்ஜெட்டில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் அல்லது டேப் வழங்க 3,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசில், அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா சட்டசபையில் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.6.90 லட்சம் கோடி என தெரிவித்தார்.
இந்த பட்ஜெட்டில் சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.25,350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.19,500 கோடியாக இருந்தது. இந்த திட்டத்தின்படி, அனைத்து 2.26 கோடி வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீரை வழங்குவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
newstm.in