மூன்று முறை செத்துப்பிழைத்தவரை விடாமல் துரத்தும் ஆவி: இப்படியும் நடக்குமா என்ன?

விபத்து ஒன்றில் சிக்கி மூன்று முறை செத்துப்பிழைத்த தன்னை விடாமல் ஆவி ஒன்று பயங்கரமாக துரத்துவதாக தெரிவித்துள்ளார் அமெரிக்கர் ஒருவர்.

திகிலடைய வைத்த காட்சி

பாழடைந்த கட்டிடங்களைச் சென்று பார்வையிடும் பழக்கம் கொண்ட நிக் சம்மர்ஸ் (Nick Summers, 36) 1940களில் கட்டப்பட்ட பாழடைந்த மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

அதன் பிறகு வாழ்க்கையில் நிக் சந்தித்ததெல்லாமே திகில் சம்பவங்கள்தான்!

ஒரு நாள் தன் மனைவி Kinseyயுடன் படுக்கையிலிருக்கும்போது, வீட்டுக்குள் யாரோ நடமாடுவதுபோல் தெரியவே, படுக்கையிலிருந்து எழுந்து சென்று பார்த்த நிக்குக்கு பயத்தில் உடல் புல்லரித்துப்போயிருக்கிறது.

மூன்று முறை செத்துப்பிழைத்தவரை விடாமல் துரத்தும் ஆவி: இப்படியும் நடக்குமா என்ன? | A Spirit That Chases The Dead Three Times

Image: Kennedy News and Media

ஆம், ஒரு சிறுமி, அவளுக்கு 9 அல்லது 10 வயது இருக்குமாம். ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுமியின் உடல் அதிர்ந்துகொண்டிருக்க, அவளைச் சுற்றி இளநீல நிறத்தில் காணப்பட்டதாம். நிக் கண்ணுக்கு முன்னாலேயே அவள் ஆவியாகிப்போனாளாம்.

வீட்டை காலி செய்த தம்பதியர்

இப்படியே இடைவிடாமல் பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்ததால் வீட்டை மாற்றி வேறு வீட்டுக்குச் சென்றார்களாம் தம்பதியர்.

அப்படியே இரண்டு வீடு மாற்றியும் பிரச்சினை தீர்ந்தபாடில்லையாம். ஆவி ஒன்று ஆக்ரோஷமாக தன்னைத் துரத்துவதாகத் தெரிவிக்கிறார் நிக்.

மூன்று முறை செத்துப்பிழைத்தவரை விடாமல் துரத்தும் ஆவி: இப்படியும் நடக்குமா என்ன? | A Spirit That Chases The Dead Three Times

Image: Kennedy News and Media

வீட்டிலிருந்த பொருட்கள் தானே நகர்வதும், படுக்கையறைக் கதவு தானே உள்பக்கம் பூட்டிக்கொள்வதும், யாரோ அவ்வப்போது நிக்கின் குரலிலேயே, ஹேய் நிக் என அழைப்பதுமாக தினமும் தொல்லைகள் தொடர்கிறதாம்.

அடிக்கடி வீட்டிலுள்ள லைட் பல்புகள் வெடிப்பதால், மாதம் ஒன்றிற்கு 14 முதல் 20 பல்புகள் மாற்றவேண்டியுள்ளதாம்.

ஆவிகளின் தொல்லை தாங்கமுடியாமல், இப்போது வாழும் வீட்டையும் சில வாரங்களுக்குள் மாற்ற திட்டமிட்டுள்ளார்களாம் நிக், கின்சி தம்பதியர்.
 
மூன்று முறை செத்துப்பிழைத்தவரை விடாமல் துரத்தும் ஆவி: இப்படியும் நடக்குமா என்ன? | A Spirit That Chases The Dead Three Times

Image: Kennedy News and Media

மூன்று முறை செத்துப்பிழைத்தவரை விடாமல் துரத்தும் ஆவி: இப்படியும் நடக்குமா என்ன? | A Spirit That Chases The Dead Three Times

Image: Kennedy News and Media  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.