அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான ஆட் சேர்ப்பு அறிவிப்பு கடந்த பிப்ரவரி 15ம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டின் கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அக்னி வீரர் பொதுப்பணி, தொழில்நுட்பம், க்ளார்க், ஸ்டோர் கீப்பர், ட்ரேட்ஸ்மேன் ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தேர்வுக்கு திருமணம் ஆகாத, 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நிபந்தனைகள்:
அக்னிவீர் ஜெனரல் ட்யூட்டி : 10ம் வகுப்பில் 45% மதிப்பெண்ணோடு பாஸ் ஆகியிருக்க வேண்டும்.
அக்னிவீர் டெக்னிக்கல் கிளார்க் : 12ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் குறிப்பிட்ட பாடங்களில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அக்னிவீர் கிளார்க் / ஸ்டார் கீப்பர் டெக்னிக்கல் : 60% மதிப்பெண்ணோடு 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன் : 10வது தேர்ச்சி
அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன் : 8வது தேர்ச்சி
எப்படி விண்ணப்பிப்பது?
அக்னிபாத் திட்டத்தில் சேர விரும்புவோர் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலமே விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக மார்ச் 15ம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதில் விண்ணப்பதாரர்கள் தத்தம் உரிய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து தொடர்ந்து கண்காணித்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதுபோக, அக்னிவீரர் வேலைவாய்ப்பு குறித்து இன்னபிற விவரங்களை அறிந்துகொள்ள சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள ஜார்ஜ் கோட்டையில் உள்ள பணிநியமன அலுவல எண்ணான 044-25674924 தொடர்புகொண்டு தெளிவுபெற்றுக்கொள்ளலாம்.
இதற்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வு நுழைவுச் சீட்டு மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஏப்ரல் 17ம் தேதியில் இருந்து 30ம் தேதிக்குள் நாடு முழுவதும் 180 மையங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ராணுவத்துக்கு ஆட்களை சேர்க்கும் தேர்வுமுறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதாவது, உடற்தகுதி நடத்தப்பட்ட பிறகே எழுத்துத் தேர்வுக்கு தகுதியாகும் படி இருந்த தேர்வு முறையை மாற்றியதால் தற்போது முதலில் எழுத்துத் தேர்வும் அதன் பிறகு உடற்தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM