லண்டனில் இலவச பள்ளி உணவு திட்டம்: மேயரின் அறிவிப்பால் ஏழ்மை குடும்பங்கள் மகிழ்ச்சி


லண்டனில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு £ 130 மில்லியன் மதிப்பிலான பள்ளி உணவு திட்டத்தை அதன் மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார்.

பள்ளி உணவு திட்டம்

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் அடுத்த கல்வியாண்டில் ஒவ்வொரு ஆரம்ப பள்ளிக் குழந்தைகளுக்கும் இலவச உணவு வழங்கும் அவசர திட்டத்தை அதன் மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார்.

செப்டம்பரில் தொடங்கும் £ 130 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான இந்த திட்டம், சோதனை திட்டமாக ஒரு வருடத்திற்கு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sky Newssky news

சுமார் 4 மில்லியன் குழந்தைகள் உணவு பாதுகாப்பின்மையால் பிரித்தானியாவில் போராடும் நிலையில், இந்த திட்டம் 2,70,000 குழந்தைகளுக்கு இதிலிருந்து சிறிது ஓய்வு அளிக்கும் என தெரியவந்துள்ளது.

உணவு திட்டத்தால் மகிழ்ச்சி

இந்நிலையில் லண்டன் மேயர் சாதிக் கானின் அறிவிப்பால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என உணவு அறக்கட்டளையின் பிரச்சாரம் மற்றும் தொடர்பு இயக்குனர் ஜோ ராலிங் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் காலியான வயிற்றுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியால் பேப்பர்களை சாப்பிடுவது, ரப்பர் சாப்பிடுவது மற்றும் பிற குழந்தைகளிடம் இருந்து உணவுகளை திருடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற இதயத்தை உடைக்க கூடிய கதைகளை கேட்கிறோம்.

PA WirePA Wire

ஆசிரியர்களும் தொடர்ந்து, பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க முடியாது என்று தெரிவித்து வருகின்றனர் என குறிப்பிட்ட  ஜோ ராலிங் பிரித்தானிய அரசாங்கம் இதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

மேலும் இறுதியாக மேயர் சாதிக் கான், நகரம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு இலவசப் பள்ளி உணவு வழங்கப்படும் என தனித்து அறிவித்து இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் நகரம் முழுவதும் வாழ்க்கை செலவு நெருக்கடியால் போராடும் குடும்பங்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

லண்டனில் இலவச பள்ளி உணவு திட்டம்: மேயரின் அறிவிப்பால் ஏழ்மை குடும்பங்கள் மகிழ்ச்சி | Mayor Of Uk London Announces Free School MealsGetty



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.