அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இருகட்சி ஆட்சி நடைமுறையில் இருக்கும் அமெரிக்காவில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி ஆகியவை மத்தியில் தான் போட்டி நிலவுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு நிறைவு பெறுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024
இந்த சூழலில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் யார், யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற பரபரப்பு தற்போதே தொற்றிக் கொண்டது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடக் கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. முதலில் இரண்டு கட்சிகளும் அதிபர் வேட்பாளருக்கு தனித்தனியே தேர்தல் நடத்தும்.
சும்மா அதிருதுல்ல..உக்ரைனுக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்த அமெரிக்க அதிபர்.!
உட்கட்சி தேர்தல்
இதில் வெற்றி பெறும் நபர்களே அடுத்த ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னிறுத்தப்படுவர். அந்த வகையில் ட்ரம்ப் தனக்கு எதிராக கட்சிக்குள் போட்டி வந்துவிடக் கூடாது என தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறார். தனக்கான ஆதரவை மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் பேசி திரட்டி கொண்டிருக்கிறார்.
டொனால்ட் ட்ரம்ப் போட்டி
இருப்பினும் இவரை எதிர்த்து களமிறங்க கட்சிக்குள்ளேயே சிலர் சீக்ரெட் மூவ்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் ட்ரம்பிற்கு போட்டியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் களமிறங்க உள்ளதாக வெளியான செய்தி ஹைலைட்டாக மாறியுள்ளது. இது இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. அவரது பெயர் விவேக் ராமசாமி. வயது 37.
யார் இந்த விவேக் ராமசாமி?
கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவரது பெற்றோர் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தவர்கள். விவேக் ராமசாமி அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதில் இருந்தே தனித்துவமான நபராக வளர வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவர். இதன் காரணமாகவே சாதனைகளை தனது வாழ்க்கையில் ஒவ்வொன்றாக சேர்த்து கொண்டவர்.
‘இனிமேல் உளவு பலூன்கள் பறந்தால்..’ – சீனாவை நேராக மிரட்டிய அமெரிக்கா.!
தொழிலதிபர் விவேக்
அதில் மல்டி மில்லியன் டாலர் வருமானம் ஈட்டக்கூடிய நிறுவனங்களை நிர்வகிப்பது முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் மருந்து, தொழில்நுட்பங்கள் சார்ந்த நிறுவனங்களை நடத்தி வருகிறார். தொழிலதிபர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என பன்முகங்கள் கொண்டவர். குடியரசு கட்சியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர். இவர் அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது, தனது அதிபர் கனவை வெளிப்படுத்தியுள்ளார்.
மூன்று பேர் மனு தாக்கல்
மேலும் மெரிட் அடிப்படையிலான குடியேற்றத்தை ஆதரிப்பதாகவும், சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைபவர்களை எதிர்ப்பதாகவும் பேசியுள்ளார். இந்த சூழலில் டொனால்ட் ட்ரம்ப், விவேக் ராமசாமி, முன்னாள் தெற்கு கரோலினா ஆளுநர் நிக்கி ஹாலே ஆகியோர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சிக்குள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.