Ajithkumar: மணிரத்னம் உடன் ஏற்பட்ட மனஸ்தாபம்..முக்கிய படத்திலிருந்து வெளியேறிய அஜித்..

அஜித்
அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். படத்திற்கு படம் இவரின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்துகொண்டே தான் இருக்கின்றது. ரசிகர்கள் இவரை வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு ரசித்து வருகின்றனர். கடந்தாண்டு அஜித்தின் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களின் பேராதரவினால் வசூல் ரீதியாக இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. எனவே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு அஜித்தின் படங்களுக்கு ஆதரவு இருப்பதால் இவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனியின் இயக்கத்தில் லைக்காவின் தயாரிப்பில் AK62 படத்தில் நடிக்கவுள்ளார்

விமர்சனம் அஜித் தற்போது உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் ஆரம்பகாலத்தில் பல போராட்டங்களை சந்தித்து வந்தார். அமராவதி என்ற படத்தில் தான் அஜித் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருந்தாலும் அதற்கு முன்பே தெலுங்கு படம் ஒன்றில் அஜித் நடித்தார். ஆனால் அப்படத்தின் இயக்குனர் திடீரென மரணமடைந்ததால் அப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பட வாய்ப்புகள் இன்றி தடுமாறிய அஜித்திற்கு அமராவதி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அஜித்தின் முதல் படமான பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தின் இயக்குனர் பாதியிலேயே மரணமடைந்ததால் அஜித்தை சினிமா வட்டாரத்தை சார்ந்த சிலர் ராசி இல்லாத நடிகர் என விமர்சித்து வந்தனர். இருப்பினும் அஜித் தொடர்ந்து போராடி வந்தார்

போராட்டம் அஜித் அறிமுகமான அமராவதி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் திரைத்துறையில் சாதித்து காட்டவேண்டும் என்ற முனைப்பில் தொடர்ந்து போராடி வந்தார் அஜித். அதன் பலனாக அஜித்திற்கு வசந்தின் ஆசை திரைப்படம் அமைந்தது. 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படம் தான் அஜித்தின் முதல் ஹிட் படமாகும். இப்படத்தின் மூலம் அஜித்திற்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உருவானார்கள். இருப்பினும் அஜித்திற்கு ஆசை படத்தில் தன் குரலில் பேசமுடியவில்லையே என்ற வருத்தம் இருந்து வந்தது. அஜித்தின் குரல் எடுபடவில்லை என்ற காரணத்தால் ஆசை படத்தில் அவருக்கு டப்பிங் குரல் பயன்படுத்தப்பட்டது. இதன் பிறகு காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற தொடர் வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார் அஜித்

மணிரத்னத்துடன் மோதல் இந்நிலையில் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த அஜித் அடுத்ததாக நேருக்கு நேர் படத்திலும் நடிக்க கமிட்டானார். ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அஜித் அதன் பிறகு நேருக்கு நேர் படத்திலிருந்து வெளியேறினார். அதன் பின் அஜித்திற்கு பதிலாக இப்படத்தில் சூர்யா நடித்தார். அஜித் நேருக்கு நேர் படத்திலிருந்து வெளியேறியதற்கு கால் சீட் பிரச்சனை தான் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அஜித்திற்கும் நேருக்கு நேர் படத்தை தயாரித்த இயக்குனர் மணிரத்னத்திற்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக தான் அஜித் இப்படத்திலிருந்து வெளியேறினார் என தெரியவந்துள்ளது. என்னவென்றால் நேருக்கு நேர் படத்திற்காக அஜித்திற்கு பேசப்பட்ட சம்பளத்தில் உடன்பாடில்லையாம். அஜித் கேட்ட சம்பளத்தை மணிரத்னத்தால் தரமுடியாததால் அஜித் நேருக்கு நேர் படத்திலிருந்து வெளியேறியுள்ளாராம். அதன் பிறகு தான் இப்படத்தில் சூர்யா அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.