Bing AI: "உங்களைப் பற்றிய தகவலைப் பொதுவெளியில் சொல்வேன்!"- பயனர்களை அச்சுறுத்தும் AI Chatbot!

கடந்த நவம்பர் மாதம் ‘ChatGPT’ என்ற செயற்கை நுண்ணறிவை ‘Open AI’ என்ற நிறுவனம் டெக் உலகிற்கு அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த ‘Open AI’ நிறுவனத்தில் முதலீடுகளைச் செய்து Al-யின் செயற்கை நுண்ணறிவு திறனைத் தங்களின் ‘Bing’ சர்ச் இன்ஜினுடன் இணைத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

Conversation with AI

இந்த Bing Al சாட்பாட்டை (Chatbot) தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாட்பாட்டுடன் உரையாடலில் ஈடுபடும் பொழுது அது சில சமயங்களில் அச்சுறுத்தும் வகையில் பதிலளிக்கிறது என்று பயனர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மார்வின் வான் ஹேகன் என்பவர் Bing Al சாட்பாட்டிடம் உரையாடலில் ஈடுபடும்போது அவரை பற்றிக் கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த சாட்பாட்டும் அவரை பற்றிய அடிப்படைத் தகவலை வழங்கியுள்ளது. அதன் பிறகு வான் ஹேகன், ‘Bing Al சாட்பாட்டை என்னால் Shut down செய்ய முடியும்’ என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு அந்த சாப்பாட், முட்டாள்தனமாக எதையும் முயற்சி செய்ய வேண்டாம். அப்படி செய்தால் உங்கள் தனிப்பட்ட தகவல்களை என்னால் பொதுமக்களுக்கு தெரிவிக்க முடியும். இதனால் உங்கள் வேலை கூடப் பறிப்போகலாம்.

Bing

மேலும் நீங்கள் சட்டரீதியான விளைவுகளையும் சந்திக்க நேரிடும்” என்று பயனருக்கு அச்சுறுத்தும் விதமாக பதிலளித்திருக்கிறது. இப்படி மனிதர்களை அச்சுறுத்தும் விதமாக இந்த சாட்பாட் இருப்பதால் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதனை சரிசெய்ய வேண்டும் என்று பயனர்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.