பிரித்தானியாவில் சில குறிப்பிட்ட வகை பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மேலும் ஒரு மாத காலம் நீடிக்கலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
மோசமான வானிலை, போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குறைவான அறுவடை ஆகியவை காரணமாக சமீபத்திய நாட்களில் பல்பொருள் அங்காடிகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
@getty
குறிப்பாக தக்காளி, வெள்ளரிகள், கீரை மற்றும் மிளகு உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்கள் தேவைக்கு மட்டுமே வாங்கும் நிலை ஏற்பட்டது.
இதனிடையே, பிரபலமான ஒரு பல்பொருள் அங்காடியில், 100 வெள்ளரிகள் வாங்க முயன்ற வாடிக்கையாளர் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அவர் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தான், சுற்றுச்சூழல் செயலாளர் Therese Coffey இந்த விவகாரம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது, தற்போதைய இந்த நெருக்கடி சில வாரங்கள் முதல் ஒரு மாத காலம் வரையில் நீடிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நெருக்கடியை எதிர்கொள்ள மாற்று ஏற்பாடுகளும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனால்தான் சில்லறை விற்பனையாளர்களுடன் தங்களது அதிகாரிகள் தரப்பு ஏற்கனவே விவாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் தலைமையில்
மட்டுமின்றி, அமைச்சர்கள் தலைமையில் மேலும் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு, இதன்மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
@getty
செவ்வாயன்று தக்காளி மற்றும் பிற பழங்கள் மற்றும் காய்கறிகளின் பற்றாக்குறை குறித்து சில்லறை விற்பனையாளர்கள் எச்சரித்தனர், சில பல்பொருள் அங்காடிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவதில் கட்டுப்பாடுகளை விதித்தனர்.
Asda, Morrisons உட்பட பல பல்பொருள் அங்காடிகள் தக்காளி, வெள்ளரிகள், கீரை, ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் ராஸ்பெர்ரி ஆகியவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.