லக்னோ: உ.பி.யில் மாநில பள்ளிக் கல்வி வாரியம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வில் காப்பி, பிட் அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுப்பதற்காக, மாணவர்களை தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வுக்கூடத்தில் அனுமதித்தல், சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது.
இதன் காரணமாக தேர்வின் இரண்டாம் நாளான கடந்த வெள்ளிக்கிழமை 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான இந்தி தேர்வுக்கு சுமார் 4.5 லட்சம் மாணவர்கள் வரவில்லை. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலையில் நடந்த 10-ம் வகுப்பு கணிதத் தேர்வை 1.7 லட்சம் மாணவர்கள் தவிர்த்தனர். பிற்பகலில் நடந்த 12-ம் வகுப்பு வணிகவியல், மனை அறிவியல் தேர்வுகளையும் 10-ம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வையும் சுமார் 25,000 மாணவர்கள் எழுதவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் பொதுத் தேர்வு தொடங்கியதில் இருந்து பல்வேறு தேர்வுகளை 6.5 லட்சம் மாணவர்கள் தவிர்த்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.