சங்கரன்கோவில்: கிள்ளிகுளம் வோளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர். இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக கிள்ளிகுளம் வோளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் ஆலியா. அபின்சா,அன்பரசி,பத்மபிரியா, பானுமதி, தரணி, மாளவிகா மோகனபிரியா ஆகியோர் கண்டிகைபேரி கிராமத்தில் சிறுதானியத்தின் பயன்களையும் அதன் முக்கியத்துவத்தையும் கண்காட்சியில் எடுத்துரைத்தனர்.
மேலும் அதன் சத்துக்கள் பற்றியும் விரிவாக விளக்கினர். சங்கரன்கோவில் வேளாண் உதவி இயக்குனர் ராமர், துணை வேளாண் அலுவலர் வைத்தியலிங்கம், வேளாண் அலுவலர் சுரேஷ் உதவி வேளாண் அலுவலர் அன்பழகன் ஆகியோர் மாணவிகளை வழிநடத்தினர்.