சீனாவில், இரண்டாயிரத்து 400 ஆண்டுகள் பழமையான நவீன கழிப்பறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஷான்சி மாகாணத்திலுள்ள யுயாங் தொல்பொருள் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது தோண்டி எடுக்கப்பட்ட இந்த கழிவறையை கண்டு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர்.
“சீனாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே ஃப்ளஷ் கழிப்பறை இதுவாகும்” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தார்.
கழிப்பறையில் இருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பழங்கால மக்களின் உணவு முறைகள் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களையும் கண்டறியலாம் என கூறப்படுகிறது.