டெல்லி: டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 19%-ல் 20%-ஆக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
டெல்டா மாவட்டங்களில் பருவரும் தவறி பெய்த மழையின் காரணமாக கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் குழு டெல்டா மாவட்டங்கள் ஆய்வு செய்ததற்கு பின்பாக 19%-ல் இருந்து 20%-ஆக உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு இதுபோன்று நெல் கொள்முதல் நேரங்களில் பெய்யும் மழையால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட கூடிய நிலையில் 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று முன்பே கோரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், 19%-ஆக ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் தற்போது டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் நெல் ஈரப்பதம் அதிகரித்ததால் 19%-ல் இருந்து 22%-ஆக உயர்த்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.இதில் ஒன்றிய குழு நேரடியாக ஆய்வு செய்ததற்கு பிறகு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கொள்முதல் ஈரப்பத அளவை 20%-ஆக உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவிட்டது.