கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. இதைத் தொடர்ந்து பல நாடுகளில் கொரோனாத் தொற்றினால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து, கடந்த ஆண்டு முதல் உலக நாடுகளில் கொரோனாக் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு வந்தது. இருப்பினும் சில நாடுகளில் கொரோனாத் தொற்று குறையாமலேயே இருந்து வந்தது.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் தினமும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட வண்ணம் இருந்து. இந்த நிலையில், தமிழகத்தில் ஒன்பது ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உள்பட மொத்தம் பன்னிரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சென்னையில் இரண்டு பேருக்கும், கோவையில் மூன்று பேருக்கும், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், திருவாரூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலியில் தலா ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது.