ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக 71 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டியளித்துள்ளார்.
சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி இதுவரை 734 புகார்கள் வந்துள்ளன. அதில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 71 புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .நாம் தமிழர் கட்சி பதட்டமான இடங்களில் பரப்புரை செய்வதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் இணைந்து சூழ்நிலை பொறுத்து அனுமதி அளிப்பார்கள்.
16 மேஜைகளில் 3 அதிகாரிகளுடன் பணியாளர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவார்கள். மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு முழுவதும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். 16 மேஜைகளில் பத்து மேஜைகள் ஒரு அறையிலும் 6 மேஜைகள் மற்றொரு அறையிலும் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM