"பழைய சோறால் தான் என் நீண்ட நாள் உடல் உபாதை சரியானது” ஸ்ரீதர் வேம்புவின் பதிவுக்கு குவியும் பாராட்டு


 தனது காலை உணவாகப் பழைய சோறு மாறிவிட்டதால் தான் என் உடல் ஆரோக்கியம் மீண்டது எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்ரீதர் வேம்புக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.

காலை உணவாக பழைய சோறு

சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நமது மூதாதையர்களின் அருமருந்தான பழைய சோறு கஞ்சி தான் எனது காலை உணவாக இருக்கிறது என்றும் அதனால் எனக்கிருந்த ஐபிஎம் என்ற உடல் உபாதை சரியானது என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்குப் பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

ஸ்ரீதர் வேம்பின் ட்விட்டர் பதிவு

மற்ற மாநிலத்தைச் சேர்ந்த பலரும் அவர் பழைய சோறு முறையைப் போல் தங்களது பண்டைய உணவு கலாச்சாரத்திலும் தண்ணீர் சாதம், வடிகட்டாத சாதம் போன்ற உணவு முறைகள் இருப்பதாகப் பதிவிட்டுள்ளனர்.

@twitter

                                                                                                                                        @twitter

ஐபிஎம் என்ற குடல் அலற்சி பிரச்சனை என்பது வயிறு மந்தமாக இருத்தல், அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்பதைப் போன்ற உணர்வை தருவதாகும்.

இது வயது முதிர்ந்தவர்கள், இளைஞர்கள் என வயது வித்தியாசம் பாராமல் எல்லாருக்கும் வருகிறது.

இந்த பிரச்சனையை நீண்ட நாளாகச் சந்தித்து வந்த ஸ்ரீதர் வேம்பு தனது காலை உணவாகப் பழைய சோறு சாப்பிட்டு வந்ததன் மூலம் சரியானதாக அவர் தெரிவித்துள்ளார்.

குவியும் பாராட்டு

உயர்கல்வி பெறாத கிராமப்புற மாணவர்களுக்காக தொழில்சார் மென்பொருள் மேம்பாட்டுக் கல்விக்காக சோஹோ பள்ளியை நிறுவியவர் ஸ்ரீதர் வேம்பு.

@express photo

                                                                                                                         @expreesphoto

அவர் பழையச் சோறு பற்றி ட்விட்டரில் பதிவிட்டதற்குப் பின்பு பலரும் பழைய சோறு தயாரிப்பது பற்றி காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.மேலும் தமிழ் உணவு பண்பாட்டைப் பற்றி உலகறிய செய்த இவரது செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.