பிரித்தானிய பாஸ்போர்ட்டில் செய்யப்பட இருக்கும் ஒரு முக்கிய மாற்றம் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
பிரித்தானிய பாஸ்போர்ட்டில் செய்யப்பட இருக்கும் ஒரு முக்கிய மாற்றம்
இந்த கோடையில் பிரித்தானிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கவனிக்கலாம்.
சார்லஸ் பிரித்தானியாவின் மன்னரானதைத் தொடர்ந்து பாஸ்போர்ட் தொடர்பிலான விதிகளில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதாவது, தற்போது பிரித்தானிய பாஸ்போர்ட்கள் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பெயரால் வழங்கப்பட்டுவருகின்றன.
விதி மாற்றங்களைத் தொடர்ந்து, இனி பிரித்தானிய பாஸ்போர்ட்கள் மன்னர் சார்லஸ் பெயரால் வழங்கப்படும்.
பாஸ்போர்ட்டினுள் என்ன எழுதப்பட்டிருக்கும்?
சார்லஸ் மன்னரானதைத் தொடர்ந்து, இனி, பாஸ்போர்ட்டினுள், மன்னரின் பெயரால், இந்த பாஸ்போர்ட்டை வைத்திருப்பவரை தடை எதுவுமின்றி நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கவும், அவருக்குத் தேவையான உதவியும் பாதுகாப்பும் வழங்கவும் மேன்மை தங்கிய பிரித்தானிய மன்னரின் மாகாணச் செயலர் கோருகிறார் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த மாற்றம் என்ன திகதியில் நிகழ இருக்கிறது என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்த இந்த ஆண்டிலேயே அந்த மாற்றம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு முக்கிய விடயம், இந்த மாற்றம் செய்யப்படாத, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்களைப்பொருத்தவரை, அவை காலாவதியாகும் வரை செல்லத்தக்கவையாக இருக்கும்.
அத்துடன், நீல நிற பாஸ்போர்ட்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும், பர்கண்டி நிற பாஸ்போர்ட்களும், அவை காலாவதியாகும் வரை செல்லத்தக்கவையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.