அவுஸ்திரேலிய நாட்டில் வானத்திலிருந்து மீன் மழை பொழிந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
நன்னீர் மீன்கள்
பொதுவாக கடுமையான மழையின் போது பனிக்கட்டி மழை பொழியும் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவுஸ்திரேலியா மீன்கள் மழையாக பொழிந்திருக்கிறது.
அவுஸ்திரேலிய நாட்டில் உள்ள லாஜாமானு எனும் நகரில் தான் இது நடந்துள்ளது, அதிசயம் என்னவென்றால் கடலோரப் பகுதியான அந்நகரில் நன்னீர் மீன்கள் விழுந்திருப்பது தான்.
கடுமையான புயல்
இது குறித்து அந்நகரில் வசிக்கும் ஜான்சன் ஜப்பானங்கா பேசுகையில் ” நாங்கள் வசிக்கும் வடக்குப் பகுதியில் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து கடுமையான மழை பொழிந்து வருகிறது.
புயலின் காரணமாக கடுமையாக காற்று வீசியதால் நாங்கள் பணிக்குச் செல்லாமல் வீடுகளில் இருந்தோம்.
அப்போது எங்கள் வீட்டின் கதவுகளில் யாரோ கல் எரிவது போல் சத்தம் வர நாங்கள் என்னவென பார்க்கப்போனோம்.
பார்த்தால் ஏதோ அசைவது போல் இருந்தது. அருகில் சென்று பார்க்கையில் அவை மீன்கள் எனத் தெரிந்தது, சிறுவர்கள் அவற்றைச் சமைக்கும் பாத்திரத்தில் சேகரிக்கத் துவங்கினர்” என்றார்.
கடவுளின் ஆசீர்வாதம்
இதே பகுதியில் கடந்த 2010, அதற்கு முன்னர் 2004 மற்றும் 1974ம் ஆண்டுகளில் இதுபோல மீன் மழை பொழிந்திருக்கிறது.
ஆனால் ஒவ்வொரு முறை இம்மழை பொழியும் போதும் அவர்கள் அதனைக் கடவுளின் ஆசீர்வாதமாகப் பார்க்கிறார்கள்.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ”கடலிலிருந்து நீர் குறைந்த காற்றழுத்தத்தின் காரணமாக ஒரேயடியாக மேலே செல்லும் அவ்வாறு செல்கையில் அவற்றில் மீன்கள், தவளைகள் போன்றவையும் கலந்து நீர் வானத்திற்கு இழுத்துச் செல்லும். அவ்வாறு செல்கையில் குறைவான அவை வேறொரு இடத்தில் மழையாகப் பெய்யும்” என்கிறார்கள்.
ஆனால் வானிலிருந்து விழுந்த மீன்கள் அனைத்தும் நன்னீரில் வாழக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.