அமெரிக்கா விசா பெறுவதில் மாற்றம்; இந்திய மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.!

இந்திய மாணவர்க்ள் உக்ரைன், ரஷ்யா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் மேல்படிப்பிற்காக செல்வது தற்போது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவிற்கு கல்வி கற்க செல்வோரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆனால் அமெரிக்க விசா பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அமெரிக்க விசா பெறுவதற்கு கால தாமதம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவில் விசா செயலாக்கத்தில் தாமதங்களைக் குறைக்கும் நோக்கத்துடன், முதல் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு சிறப்பு நேர்காணல்களை திட்டமிடுதல் மற்றும் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட புதிய முயற்சிகளை கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா தொடங்கியது.

விசா நிலுவையைக் குறைப்பதற்கான பல்முனை அணுகுமுறையின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்தில் உள்ள தூதரகங்கள் கடந்த ஜனவரி 21 அன்று “சிறப்பு சனிக்கிழமை நேர்காணல் நாட்களை” நடத்தியது. அதைத் தொடர்ந்து வரும் நாட்களிலும் இதுபோன்ற சிறப்பு நேர்காணல்களை நடத்தப்படும் என அமெரிக்க தூதரகம் அறிவித்தது.

அதேபோல் ஜனவரி மற்றும் மார்ச் 2023க்கு இடையில், விசா செயலாக்க திறனை அதிகரிக்க வாஷிங்டன் மற்றும் பிற தூதரகங்களில் இருந்து டஜன் கணக்கான தற்காலிக தூதரக அதிகாரிகள் இந்தியாவிற்கு வருவார்கள் எனவும் அமெரிக்க தூதரகம் கூறியது.

இந்தநிலையில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் படிப்பு தொடங்குவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல மையங்களில் காத்திருப்பு நேரம் 300 நாட்கள் வரை இருப்பதால் இந்திய மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

EPS க்கு தற்காலிக வெற்றியே TTV தினகரன் ஆதங்கம்

அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான பணியகம் இந்த வாரம் F மற்றும் M பிரிவில் மாணவர் விசாக்கள் அவர்களின் கல்விக் காலம் தொடங்குவதற்கு 365 நாட்களுக்கு முன்பே வழங்கப்படும் என்று அறிவித்தது. “F மற்றும் M மாணவர் விசாக்கள் இப்போது I-20 திட்டம் தொடங்கும் தேதிக்கு 365 நாட்களுக்கு முன்பே வழங்கப்படலாம், மேலும் மாணவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க அதிக நேரம் அனுமதிக்கும்” என்று அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான பணியகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து காணாமல் போகும் தொழிலதிபர்கள்; சீனாவில் தொடரும் மர்மம்.!

ஆனால் முன்கூட்டியே விசாவைப் பெறும் மாணவர்கள் கூட தங்கள் திட்டம் தொடங்கும் தேதிக்கு 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் குறிப்பிடதக்கது. அமெரிக்க தூதரகம் மற்றும் தூதரகங்கள் இந்த ஆண்டு இந்திய மாணவர்களிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான விசாக்களை பெறும் என்று எதிர்பார்க்கின்றன என்று மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தூதரகத் தலைவர் ஜான் பலார்ட் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.