புதுடெல்லி: டெல்லியில் நண்பர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, அவர்களில் ஒருவர் மற்றொரு நண்பரை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் கெவ்ரா தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பின் ஒரு அறையில் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நபரின் பெயர் நரேந்திரா (45). அவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரின் சடலத்துக்கு அருகில் தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இரு நண்பர்களில் ஒருவரான ஜிதேந்தர் (35) என்பவர் நரேந்திராவை சுட்டுக் கொன்றுள்ளார். அவர் எதற்காக நரேந்திராவை கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.