கங்கனாவின் பாராட்டுக்களை புறக்கணித்த ஜாவேத் அக்தர்

பிரபல பாலிவுட் பாடகர் ஜாவேத் அக்தர், சமீபத்தில் பாகிஸ்தானின் லாகூரில் ஒரு பாடகருக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, 26/11-ல் மும்பை மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் போக்கை கடுமையாக கண்டித்து பேசினார். அதுமட்டுமல்ல மறைந்த பாகிஸ்தான் நடிகர்களான மெஹ்தி ஹாசன் மற்றும் நஷரத் படே அலிகான் ஆகியோருக்காக இந்தியாவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்தியாவின் இசைக்குயிலான மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு பாகிஸ்தானில் ஒரு நிகழ்ச்சி கூட நடத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானுக்கு சென்று அங்கேயே' அவர்களின் செயல் பற்றி ஜாவேத் அக்தர் இப்படி கடுமையாக பேசியதற்கு இங்குள்ள பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். அந்த வகையில் துணிச்சலான கருத்துக்களை கூறிவரும் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும், சரியான மற்றும் துனுச்சலான பேச்சு என்று கூறி தனது பாராட்டுகளை ஜாவேத் அக்தருக்கு தெரிவித்திருந்தார். ஆனால் இதுபற்றி ஒரு நிகழ்ச்சியில் ஜாவேத் அக்தரிடம் கேட்கப்பட்டபோது, கங்கனாவின் பாராட்டுக்கள் எனக்கு தேவையில்லை என்றும் அவரது பேச்சுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் அவரது பாராட்டுக்களை புறக்கணித்து ஆச்சரியப்படுத்தினார்.

அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கங்கனா, பாடகர் ஜாவேத் அக்தர் மீது பொய்யான சில விஷயங்களை கூறினார் என்று அவர் மீது நீதிமன்றத்தில் ஜாவேத் அக்தர் தொடர்ந்த வழக்கு இப்போதும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்படி கீரியும் பாம்புமாக இருவரும் இருக்கும் நிலையில் கங்கனாவின் பாராட்டுகளை ஜாவேத் அக்தர் புறக்கணித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.