சப்ஸ்கிரிப்ஷன் கட்டணத்தை குறைத்த நெட்பிளிக்ஸ் நிறுவனம்..!

நெட்பிளிக்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட நாடுகளில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, தனது பயன்பாட்டுக் கட்டணத்தை பாதியாகக் குறைத்துள்ளது.

உலகின் சுமார் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.  ஊரடங்கிற்கு பிந்தைய மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்கும் விதம் மாறி இருக்கும் சூழலில், அதற்கு ஏற்ப வருவாய் மற்றும் சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகப்படுத்த பல்வேறு வழிகளை நெட்பிளிக்ஸ் கையாண்டு வருகிறது.

அதன்படி  மத்திய கிழக்கு, துணை சகாரா ஆப்ரிக்க பகுதிகள், ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் கட்டணக் குறைப்பை அறிமுகம் செய்துள்ளது.

விலை குறைப்பு மட்டுமின்றி 12 நாடுகளில் குறைந்த விலை சந்தா திட்டங்களையும் நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.