கொல்கத்தா: சிறைகளில் சீர்திருத்த பணி மேற்கொண்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கனரக சலவை இயந்திரம் வழங்கியது மிகவும் பாராட்டுக்குரியது. பெண் சிறைவாசிகளுக்கு உதவும் வகையில் கனரக சலவை இயந்திரம் வழங்கியுள்ளது முன்மாதிரி நடவடிக்கையாகும். சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இனி சலவை இயந்திரங்கள் பயன்பாடு மாநிலங்களில் உள்ள அனைத்து சீர்திருத்த இல்லங்களிலும் இடம்பெறும் என நம்புகிறேன். சிறை சீர்திருத்தங்களை முன்னெடுத்து அத்துறையில் ஒரு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழட்டும் என தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவில் சுதந்திர போராட்டத்தின்போது கைதான பெண்களுக்கு சிறையில் கடினமான பணிகள் தரப்பட்டன. கஸ்தூரிபாய் காந்தி, தில்லையாடி வள்ளியம்மைக்கு சலவை செய்யும் பணி தரப்பட்டது எனவும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கூறினார்.