திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக்கோவில் பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை தர மருத்துவர் இல்லாத அவல நிலை அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக்கோவில் தரிசனத்திற்காக வந்திருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் நித்தியா திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மலைக்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
ஆனால் சிகிச்சை அளிக்க அங்கு மருத்துவர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனை அடுத்து முதல் உதவி சிகிச்சைக்காக கோவில் நிர்வாக ஆம்புலன்ஸ் மூலம் ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண் நித்யாவை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், ஒரு கொடுமையாக கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அந்த ஆம்புலன்ஸில் ஆக்சிஜன், வென்டிலேட்டர் போன்ற உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லை என்று, கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பக்தர்கள், கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.