தலைவர் பிரபாகரன் தந்தை மரணத்திலும் எனக்கு சந்தேகம் இருக்கிறது எனவே உடனடியாக மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தேன் என இலங்கை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் தந்தை மரணத்தில் சந்தேகம்
தலைவர் பிரபாகரன் குறித்து பழ. நெடுமாறன் அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு, ஈழத் தமிழ் மக்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தலைவர் பிரபாகரன் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டு அவரது உடல் மே 20 திகதி ஒப்படைக்கபபடும் போதே DNA பரிசோதனை சான்றிதழ் வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன், ஆனால் இன்று வரை இலங்கை அரசாங்கம் DNA பரிசோதனை சான்றிதழையோ, அவரது இறப்பு சான்றிதழையோ இந்திய அரசிடம் சமர்பிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல தலைவர் பிரபாகரனின் தந்தை மரணத்திலும் எனக்கு சந்தேகம் இருந்ததால் ஜனாதிபதி செயலாளரை தொடர்ப்பு கொண்டு, மரண விசாரணை வேண்டும் என்றும், பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.