மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை அரசு பள்ளிகள் இயங்கும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், தமிழ்நாடு பள்ளி கல்வி துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கற்றல் – கற்பித்தல் தொடர்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, கல்வி இணைச்செயல்பாடுகளை விளையாட்டு மற்றும் உடல்நல கல்வி, நாட்டு நலப்பணி திட்டம். சாரண சரணியர் இயக்கம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் ஆளுமை திறன்களை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்படுகின்றது.
இதன்பொருட்டு மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மாணவர்களின் கல்வி இணைச்செயல்பாடுகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி,
மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கை
மாவட்டங்களில் மார்ச் 4 ஆம் தேதி பள்ளி பார்வையும், மார்ச் 6 ஆம் தேதி ஆய்வு கூட்டமும் நடத்தப்படும். எனவே, மார்ச் 4 ஆம் தேதி அன்று இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு திங்கள் கிழமை அட்டவணையுடன் செயல்படும்.
இதை ஈடு செய்யும் வகையில் இந்த மாவட்டங்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 4 ஆம் தேதி 10 ,11 ,12 வகுப்புகள் அந்தந்த மாவட்டங்களில் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.