விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த வருடத்திற்கான மாசி பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதைத் தொடர்ந்து மறுநாள் மயானக் கொள்ளை திருவிழாவும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.
இதையடுத்து, இந்தக் கோவிலில் நேற்று முன்தினம் தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், இந்த விழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான மாசி பெருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.