திமாபூர்: “வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் கட்சி ஏடிஎம் இயந்திரமாக பயன்படுத்துகிறது. பாஜக அந்த எட்டு மாநிலங்களை அஷ்டலட்சுமிகளாக கருதிகிறது. மேலும் அதன் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது” என்று பிரதமர் மோடி தெரவித்துள்ளார்.
நாகாலாந்தின் திமாபூர் நகரில் நடந்த தேர்ல் பேரணி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு நாடு அவர்களுடைய சொந்த மக்கள் நம்பிக்கையைப் பெறாமல் நாட்டை நிர்வகிக்க முடியாது. மக்களை மதித்து அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும். முன்பு நாகாலாந்தில் பிரித்தாளும் அரசியல் இருந்தது. நாங்கள் இப்போது அதை தெய்வீக அரசாக மாற்றியிருக்கிறோம், பாஜக மக்களை ஒருபோதும் மதம், பகுதி சார்ந்து பிளவு படுத்தியது இல்லை. நாகாலாந்துக்கான எங்களின் மந்திரம் என்பது, அமைதி, முன்னேற்றம், செழிப்பு. இதனால் தான் மக்கள் பாஜகவின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இன்று நாகாலாந்திலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இலவச ரேஷன் வழங்குகிறது.
காங்கிரஸ் கட்சி வடகிழக்கின் 8 மாநிலங்களை ஏடிஎம்களாக பார்த்தைப் போல நாங்கள் பார்க்கவில்லை. பாஜக இந்த எட்டு மாநிலங்களை அஷ்ட லட்சுமிகளாக பார்ப்பதே இதற்கு காரணம். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் நாகாலாந்தை ஒரு போது கண்டுகொள்வதில்லை. அதன் நிலைத்தன்மைக்கும் வளத்திற்கும் காங்கிரஸ் முக்கியத்துவம் தரவில்லை. காங்கிரஸ் கட்சி நாகாலந்து அரசை எப்போதும் டெல்லியிருந்து இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சியை நடத்துகிறது. டெல்லி முதல் திமாபூர் வரை காங்கிரஸ் குடும்ப அரசியலை புகுத்தியுள்ளது.
தொழில்நுட்பத்தின் மூலம் பாஜக அரசு ஊழலில் பெரிய இடைவெளியை ஏற்டுத்தியுள்ளது. இதன்பயனாக டெல்லியிலிருந்து அனுப்பப்படும் பணம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் விழுகிறது. கோஹிமாவை ரயில்வேயுடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ரயில்வேயுடன் இணைத்துவிட்டால், அது வாழ்க்கையையும் தொழில்தொடங்குவதை எளிதாக்கும். சுற்றுலா முதல் தொழில்நுட்பம் வரை, விளையாட்டு முதல் ஸ்டார்ட்அப் வரை அரசு நாகாலாந்து இளைஞர்களுக்கு அரசு உதவி வருகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.