வேலையின் போது அடிபட்டதாக நஷ்ட ஈடு கேட்ட ஊழியர்! சுற்றுலா போன போட்டாவால் மாட்டிக்கொண்ட பரிதாபம்


வேலை செய்யும் போது அடிபட்டுவிட்டதாகக் கூறி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த ஊழியர், பொய்யான காரணத்தைக் கூறி சிக்கியுள்ளார்.

நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

பணியின் போது விபத்து உண்டானால் அந்த ஊழியருக்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரலாம். அதன் மூலம் அவர் பணி செய்யும் நிறுவனத்தின் மூலமாக நஷ்ட ஈடு தொகை கிடைக்கும்.

இது போல் இங்கிலாந்திலுள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் சமையல்காரராகப் பணி புரியும் ஃபெரேன்க் சுமேகி என்ற ஊழியர் வேலை செய்த போது, ட்ரேக்களை எடுக்கும்போது, முதுகில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றும், அதனால் அவருக்குத் தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

வேலையின் போது அடிபட்டதாக நஷ்ட ஈடு கேட்ட ஊழியர்! சுற்றுலா போன போட்டாவால் மாட்டிக்கொண்ட பரிதாபம் | England Chef Fake Claim While Work 

@csg

மேலும் அதனால் காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், அவரால் நடக்க முடியவில்லை என்பதையும் காரணம் காட்டி நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

போட்டா எடிட்டிங்கில் மாட்டிக் கொண்ட ஊழியர்

இதில் சிக்கல் என்னவென்றால், இவர் வசிப்பது ஒரு நாடு ஆனால் கிளைம் கோரியிருப்பதோ மற்றொரு நாட்டிலிருந்து. இங்கிலாந்தில் உள்ள வொர்க் மற்றும் பென்ஷன் டிபார்ட்மென்ட், இந்த வழக்கை பரிந்துரை செய்யும் போது, இவர் எங்கு வசிக்கிறார் எனச் சந்தேகம் எழுப்பியுள்ளது.

இந்த சந்தேகத்தைத் தெளிவுபடுத்த, அவருடைய வீட்டின் முகப்பில் நின்றபடி ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கோரியுள்ளது. வேறு நாட்டிலிருக்கும் அவரோ புகைப்படத்தை போட்டா ஹாப்பில் இங்கிலாந்திலிருப்பது போல் எடிட்டிங் செய்து அனுப்பியிருக்கிறார்.

அவன் அனுப்பிய புகைப்படம் கூகுளிலிருந்து எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அதனைக் கூட சரியாகக் கவனிக்காமல் அனுப்பியிருக்கிறார்.


சுற்றுலா புகைப்படம் 

ஃபெரேன்க் சுமேகி  தன் குடும்பத்தோடு ஆனந்தமாகச் சுற்றுலா சென்ற புகைப்படத்தை வேறு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதனையும் பார்த்த பென்ஷன் டிபார்ட்மெண்ட் இவரது கிளைமை ரத்து செய்ததோடு மட்டுமில்லாது, அவர் செய்த குற்றத்திற்கு அபராதமும் விதித்துள்ளது.

அவருக்கு அடிப்பட்டது உண்மை தான் என அவரது பணிபுரியும் நிறுவனம் கூறியிருக்கிறது. இருந்தும் அவரது தவறான செயலுக்காக நீதி மன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.