மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவுக்கு ஹரிதான் தேவை, தான் விழாவில் பங்கேற்பது குறித்து யாருக்கும் கவலை இல்லை என மேகன் கருதுவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேகன் அப்செட்
மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவில் இளவரசர் ஹரியை பங்கேற்கவைக்கத்தான் ராஜ குடும்பத்தினர் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என மேகன் கருதுவதாக ராஜ குடும்ப நிபுணரான Kinsey Schofield என்பவர் தெரிவித்துள்ளார்.
மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவுக்கு ஹரிதான் தேவை, தான் விழாவில் பங்கேற்பது குறித்து யாருக்கும் கவலை இல்லை என மேகன் எண்ணுவதாகவும், ஆகவே, அவர் அப்செட்டாக உள்ளதாகவும் தெரிவிக்கிறார் Kinsey.
மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவில் இளவரசர் ஹரியை பங்கேற்கவைக்கத்தான் ராஜ குடும்பத்தினர் போராடிக்கொண்டிருக்கிறார்களேயொழிய, தான் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதைக் குறித்தோ அல்லது கலந்துகொள்ளாமல் இருப்பதைக் குறித்தோ அரண்மனை வட்டாரத்துக்குக் கவலை இல்லை என மேகன் கருதுகிறார்.
அந்த விடயம் அவரை கவலையடைய வைத்துள்ளதாம்.
தன்னை முக்கியமான நபராகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மேகன், தான் முடிசூட்டுவிழாவுக்கு சென்றால், உலக மக்கள் தன்னை அவமதிப்பதை அவர் விரும்பவில்லை.
ஆனாலும், ராஜ குடும்பத்துடன் தொடர்புடையவராக தன்னைக் காட்டிக்கொள்வதுதான் தனக்கு மதிப்பை அளிக்கும் என்பதையும் அவர் நன்கு புரிந்துகொண்டுள்ளார் என்கிறார் Kinsey.