ஹோண்டா சிபி350 கஃபே ரேசர் படங்கள் கசிந்தது #Hondacb350 #caferacer

விற்பனையில் உள்ள ஹோண்டா ஹைனெஸ் CB350 பைக்கின் அடிப்படையில் CB350 கஃபே ரேசர் பைக்கின் படங்கள் டீலர்களுக்கான நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த படங்கள் முதன்முறையாக கசிந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 உட்பட ஜாவா, யெஸ்டி பைக்குகளுக்கு போட்டியாக வந்த ஹோண்டா ஹைனெஸ் பெரிதான வரவேற்பினை பெறவில்லை. தற்போது வரை மாதந்திர விற்பனை எண்ணிக்கை 1500 யூனிட்டுகளுக்கு குறைவாகவே சிபி350 பதிவு செய்து வருகின்றது.

Honda CB350 cafe racer

கஃபே ரேசர் மாடலின் என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இருக்காது. தொடர்ந்து 348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம் -ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 ஆர்பிஎம்-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதுடன் அசிஸ்ட் உடன் கூடிய சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா CB350 கஃபே ரேசர் பைக்கின் முன்பக்கத்தில் சிறிய வைசருடன் கூடிய பிகினி ஃபேரிங் கொடுக்கப்பட்டு சிறப்பான ரேசர் ஸ்டைலிங் அமைப்பினை வழங்குகிறது. மற்றொரு புதிய அம்சம் பின்புற இருக்கை ஒற்றையாக வழங்கப்பட்டு கவுல் பேனல் சேர்க்கப்பட்டு  பழுப்பு நிற தோல் இருக்கை உள்ளது.

இந்த மோட்டார்சைக்கிள்கள் கிளிப்-ஆன் ஹேண்டிலுக்கு பதிலாக உயரமான செட் கைப்பிடியுடன் வந்துள்ள Hness CB350 அடிப்படையிலான கஃபே ரேசர் மாடலில் பல்வேறு இடங்களில் குரோம் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு, CB350RS மாடல் போல பிளாக்-அவுட் பாகங்களைக் கொண்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, ஹோண்டா இந்தியாவில் CB350 பிரிகேட் என்ற பெயரை இந்நிறுவனம் பதிவு செய்திருந்தது. மேலும், புதிய கஃபே ரேசர் அந்த பெயரைக் குறிப்பிடலாம்.  OBD-2 அம்சத்துடன் வாரங்களில் ஹோண்டா சிபி350 மாடல் உட்பட கஃபே ரேசர் பைக்கை அறிமுகப்படுத்தும்.

image source

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.