11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வரும் 28ம் தேதி வெளியாகிறது.
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
அதன்படி இந்த ஹால் டிக்கெட்டை http://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் தேர்வு குறித்த விவரங்களை அதே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.