விற்பனைக்கு வந்த 6 மாதங்களில் சுமார் 1 லட்சத்துக்கு மேற்பட்ட ஹண்டர் 350 பைக்குகளை விற்பனை செய்து வெற்றிகரமான சாதனை கணக்கை துவங்கியுள்ளது. கிளாசிக் 350 பைக்கை தொடர்ந்து மாதந்தோறும் 15,000 க்கு மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
பல ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை தொடர்ந்து பதிவு செய்து வரும் நிலையில், இதற்கு அடுத்தப்படியான இடத்தை ஹண்டர் 350 தற்பொழுது பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் கிளாசிக் மாடலுக்கு இணையான வரவேற்பினை பதிவு செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹண்டர் 350 விற்பனை 1 லட்சம் மைல்கல்லை கடந்துள்ளதாக ராயல் என்ஃபீல்டு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 2022 முதல் ஜனவரி 2023 வரை, ஆர்இ ஹண்டர் 350 விற்பனை 1,00,183 யூனிட்களை விற்றுள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350
349சிசி ஜே-சீரிஸ் 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் வெளிப்படுத்தும் இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. பிரேக்கிங் பிரிவில் மெட்ரோ வேரியண்ட் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உடன் டூயல்-சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றைப் பெறுகிறது, அதே சமயம் ரெட்ரோ குறைந்த விலை மாடல் பின்புற டிரம் பிரேக் பெற்று ஒற்றை-சேனல் ஏபிஎஸ் பெறுகிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரை மெட்ரோ பெறுகிறது. அதே சமயம் ரெட்ரோ சிறிய டிஜிட்டல் ரீட் அவுட் கூடிய அடிப்படை கிளஸ்டரை பெற்றுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளிலும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தோனேசியா, ஜப்பான், கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் APAC பகுதியிலும் ஐரோப்பாவில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்து, லத்தின் அமெரிக்கா பகுதிகள், அர்ஜென்டினா, கொலம்பியா மற்றும் மெக்சிகோ மற்றும் ஓசியானியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ரெட்ரோ விலை ரூ.1.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் மெட்ரோ வகையின் விலை ரூ.1.67 லட்சம் முதல் ரூ.1.72 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்).