வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சீன வழங்கும் கடன், தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தப்படலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலும், அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சீனாவிடம் கடன் வாங்க பாகிஸ்தான் முடிவு செய்தது. ஏற்கனவே, பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கை சீனாவிடம் இருந்து கடன் வாங்கி உள்ளது. இச்சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் டாலர் கடன் வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை அமைச்சர் டொனால்ட் லூ கூறுகையில், இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளுக்கு சீனா கடன் வழங்கி வருவதை கவனித்து வருகிறோம். இந்த கடன், தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தப்படலாம் இந்தியா மற்றும் அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடம் பேசி வருகிறோம்.
அந்த நாடுகள் சொந்தமாக முடிவு எடுப்பது குறித்தும், சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளின் அழுத்தத்திற்கு பணியக்கூடாது என்பது குறித்து பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement