வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: இந்தி மொழியை கற்றுகொள்வதன் மூலம் பிரிட்டனின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி மேம்படும் என இங்கிலாந்து எம்.பி., கரேத் தாமஸ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: இங்கிலாந்து அரசு தெற்காசிய மொழிகளை கற்று தருவதில் முக்கியத்துவம் தர வேண்டும். குறிப்பாக இந்தி , உருது, குஜராத்தி மொழிகளை கற்றுதருவதன் மூலம் மற்றும் கற்றுக்கொள்வதன் மூலம் இருநாடுகளிடையேயான தொடர்பை மேம்படுத்த முடியும். மேற்கண்ட மொழிகளை கற்பதன் மூலம் இங்கிலாந்தின் எதிர்கால பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இதற்கு காரணம் இந்தியாவில் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் வளர்ந்து வரும் மக்கள் தொகை இங்கிலாந்தின் முக்கிய பங்குதாரராக உள்ளது.
உலக பொருளாதார மந்த சூழ்நிலையிலும் இந்தியாவின் பொருளாதாரம் பிரகாசமான இடத்தில் அமைந்துள்ளது. இந்தியா இங்கிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இருநாடுகளையும் மேம்படுத்தும். இதற்காக நாம் தெற்காசிய மொழிகளை கற்கவேண்டும். இந்த மொழி திறன்கள் நமது உறவை அதிகரிக்க முக்கியமானவை. என அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement