கள்ளக்குறிச்சியில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்தும் இயந்திரத்தில் பணத்தை செலுத்த தெரியாமல் ஒருவர் ரூபாய் 50,000 பணத்தை விட்டு சென்ற நிலையில், அதனை கண்டெடுத்த இளைஞர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
சின்னசேலம் அக்கராயபாளையத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றபோது, இயந்திரத்தின் பணம் செலுத்தும் பகுதியில் 500 ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்ட நிலையில் மேல்பகுதி திறந்திருந்ததை கண்டார். இதனையடுத்து, அதிலிருந்த பணத்தை எடுத்து வந்து ஒப்படைத்தார்.
பணத்தின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.