பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான் உடனடிக் கடனாக சீனாவிடம் 700 மில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சியால் நிதி உதவி கேட்டு சர்வதேச நாணய நிதியத்திடம் அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் டார், சீனா டெவலப்மென்ட் வங்கியிடமிருந்து தங்களுக்கு 700 மில்லியன் டாலர் கடனுதவி வந்திருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.