மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் கல்லூரி பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.
இந்தூரில் இயங்கி வரும் பி.எம். (BM) மருந்தியல் கல்லூரியில் கடந்த ஆண்டு படிப்பை முடித்த அந்த மாணவனுக்கு கல்லூரி நிர்வாகம் சான்றிதழ் தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்தவன், கல்லூரியின் பெண் முதல்வரை கல்லூரி வளாகத்தில் வைத்தே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான்.
5 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கல்லூரி முதல்வர் உயிரிழந்த நிலையில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்த முன்னாள் மாணவன் கைது செய்யப்பட்டான்.