புதுடில்லி: கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஜோயாலுக்காஸ் நகைக்கடை குழுமத்திற்கு நாடு முழுதும் மற்றும் வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. இந்நிறுவனம், சட்டவிரோதமாக கோடிக்கணக்கான பணத்தை, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, திருச்சூர் உட்பட பல இடங்களில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறிய அதிகாரிகள், ‘ஜோயாலுக்காஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 305 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement