தனுஷின் இந்த படத்தை மிஸ் பண்ணாதிங்க… சர்வதேச ஊடகத்தில் ராஜமௌலி!

SS Rajamouli Recommends Aadukalam Movie: பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்ட படத்தின் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தற்போது தனது ‘RRR’ படத்தின் ப்ரோமோஷனுக்காக அமெரிக்காவில் இருக்கிறார். 

அந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு‘ பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், இயக்குனர் ராஜமௌலி சர்வதேச ஊடகங்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார். தற்போது, ​​சமீபத்தில் ஒரு நேர்காணலில், ராஜமௌலியிடம், அனைவரும் பார்க்க வேண்டிய ஐந்து இந்திய படங்களை பரிந்துரைக்கும்படி கேட்கப்பட்டுள்ளது. அதில், தனுஷ் நடித்து, வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படத்தையும் ராஜமௌலி பரிந்துரைத்துள்ளார்.

5 திரைப்படங்கள் 

ஆடுகளம் மட்டுமின்றி, தெலுங்கில் 1980ஆம் ஆண்டு மறைந்த கே.விஸ்வநாத்தின் ‘சங்கராபரணம்’, 995ஆம் ஆண்டு சேகர் கபூரின் ‘பாண்டிட் குயின்’ (இந்தி), 2003ஆம் ஆண்டு, ராஜ்குமார் ஹிரானியின் முன்னா பாய் எம்.பி.பி.எஸ் (இந்தி), 1 2007ஆம் ஆண்டு அனுராக் காஷ்யப்பின் ‘பிளாக் ஃப்ரைடே’ (இந்தி) உள்ளிட்ட படங்களை ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்று என ராஜமௌலி தெரிவித்துள்ளார். ஆடுகளத்தின் தயாரிப்பாளர்கள் ட்விட்டரில் தங்கள் படத்தை உயர்வாக மதிப்பிட்டதற்காக ராஜமௌலிக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். அந்த ட்வீட்டில்,”நமது நாட்டின் தலைசிறந்த திரைப்பட இயக்குநரான ஒருவர் எங்களின் ‘ஆடுகளம்’ படத்தைப் பாராட்டியதில் எங்கள் மனம் மகிழ்ச்சியடைகிறது. உங்களால் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் எங்களின் திரைப்படம் குறித்து பேசிய உங்கள் அன்பான சைகைக்கு எங்களது நன்றி” என குறிப்பிட்டனர்.

ஆடுகளம் – The Roots

2007ஆம் ஆண்டு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன் திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து இரண்டாவது முறையாக திரைப்படத்தில் பணியாற்றினர். தயாரிப்பாளர் எஸ். கதிரேசன் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் அந்த படம் ‘ஆடுகளம்’ என்ற பெயரில் உருவானது. வெற்றிமாறன், விக்ரம் சுகுமாரனுடன் இணைந்து தனது கதையின் திரைக்கதை மற்றும் வசனங்களையும் எழுதியுள்ளார். சன் பிக்சர்ஸ் விநியோகம் செய்த இந்தப் படத்தில், தனுஷ் உடன் டாப்ஸி நடித்தார். கிஷோர், ஜெயபாலன், நரேன் மற்றும் முருகதாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.

ஆடுகளம், 2011ஆம் ஆண்டு 14 ஜனவரி அன்று வெளியான நிலையில், திரைக்கதை, இயக்கம் மற்றும் நடிப்பை விமர்சகர்கள் பாராட்டி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. 58ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த நடிகர் உட்பட ஆறு விருதுகளை இப்படம் வென்றது. மேலும், இப்படத்திற்கு, அமெரிக்க எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி எழுதிய ‘The Roots’ நாவல் இன்ஸ்பிரேஷனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவில் ‘RRR’ படக்குழு

‘RRR’ படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கார் 2023 விருதில் பரிந்துரைகளை பெற்றது. இதனால், மொத்த RRR குழுவும் ஆஸ்கார் விருதுக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளது. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ஏற்கனவே பாடலாசிரியர் சந்திரபோஸுடன் இருக்கும் நிலையில், ராம் சரண் நியூயார்க்கில் இருக்கிறார். ஜூனியர் என்டிஆர் மற்றும் எஸ்எஸ் ராஜமௌலி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் விரைவில் அங்கு புறப்பட உள்ளனர். 2023 ஆஸ்கார் விருது விழா மார்ச் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.