துபாய்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை துபாயில் அமீரக திமுகவினர் சிறப்பாக கொண்டாடினர்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் மார்ச் 1 அன்று கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். வெளிநாடுகளில் தமிழர்கள் அதிகமுள்ள நாடுகளில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை விழாவாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் தொடக்கமாக துபாயில் புதன்கிழமை மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா துபாய் லேண்ட்மார்க் நாசர் ஸ்கொயர் ஹோட்டலில் அமீரக திமுக அமைப்பாளரும், அயலக தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் தலைமையில் நடைபெற்றது. இதில் நிகழ்ச்சியில் கேக் வெட்டி முதல்வரின் பிறந்தநாளை அமீரகத் திமுகவினர் கொண்டாடினர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தி: நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, அயலக அணி துணைச் செயலாளர் முத்துவேல் ராமசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் முத்துவேல் ராமசாமி, தமிழகத்தில் முதல்வரின் நல்லாட்சியில் நிறைவேற்றப்பட்ட ஏராளமான திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் இந்தியாவிலேயே மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றார்.
அமீரக திமுக அமைப்பாளரும், வளைகுடா நாடுகளுக்கான அயலக தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் தனது உரையில், அயலகத் தமிழர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துபாய் தமிழ் சங்க பொதுச் செயலாளர் திருப்பானந்தாள் தாஹா, சமூக சேவகர் தொழிலதிபர் ஜெசிலா பானு, முஸ்லிம் லீக் பரக்கத் அலி , காமில், பிலால் அழியார், அமீரக திமுக நிர்வாகிகள் முஸ்தபா சரத் பாபு, செந்தில் பிரபு , இன்ஜினியர் பாலா, 89.4 எஃப் எம் மகேந்திரன் தாரிக், பாண்டியன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பாலா, எத்திசாலத் பாலா, எத்திசால்ட் ஜபருல்லா, ஜாகுவார் குரூப் நிறுவனங்கள் தலைவர் ஷா , மற்றும் தொழிலதிபர் ராமச்சந்திரன், பெனாசீர், கவிஞர் சசிகுமார், கவிஞர் மஞ்சுளா கடையநல்லூர் உதுமான், மேலப்பாளையம் பருத்தி இக்பால், அமீரக திமுக பிஆர்ஓ கபீர் மற்றும் ஏராளமான திமுகவினர் மற்றும் தமிழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . நிகழ்ச்சியை பாலாஜி பாஸ்கரன் சிறப்பாக தொகுத்து வழங்கினார் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.