நீட் தேர்வுக்கு எதிரான உச்ச நீதிமன்ற மனுவை திரும்பப் பெற்றதா திமுக அரசு? – நீட் விலக்கின் நிலை என்ன?

நீட் தேர்வு சட்ட திருத்ததுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவை தமிழக அரசு திரும்பப் பெற்றதாக செய்திகள் வெளியானது. நீட் மனுவை திரும்பப்பெற்றதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. அதற்குரிய விளக்கத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுக ஆட்சியில் அவசர கோலத்தில் காலாவதியான சட்டத்தைக் குறிப்பிட்டு நீட் ரத்து செய்ய மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை திரும்பப் பெற்று புதிய மனு தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே திமுக அரசு நீட் ரத்து மனுவை திரும்பப் பெற்றதாக வீண் பிரசாரத்தைப் பரப்ப வேண்டாம்,” என கூறியிருந்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஏன் திரும்பப்பெறப்பட்டது?

 இந்திய மருத்துவக் குழும சட்டம்(1956) மற்றும் பல் மருத்துவச் சட்டத்தில்(1948) கொண்டு வரப்பட்ட சட்டதிருத்தத்தால், 2016-17-ஆம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. பின்னர் அதில் இந்திய மருத்துவ குழும சட்டம்(1956) மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது.  அது  மருத்துவப் படிப்புகளை ஒழுங்கமைக்க, தேசிய மருத்துவ ஆணைய சட்டம் (2019) என்ற புதிய சட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. தற்பொழுது நீட் தேர்வு மற்றும் மருத்துவக்கல்வி மாணவர்கள் சேர்க்கை இந்தப் பிரிவின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முன்னாள் அதிமுக அரசு, மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்ட சட்ட விதியான இந்திய மருத்துவ குழும சட்டம் (1956) குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நீட் தேர்வு

எனவே, அதிமுக அரசால் தவறான மற்றும் நீர்த்துப்போன சட்டப் பிரிவுகளின் படி தொடரப்பட்ட  வழக்கினை தொடர்ந்து நடத்தினால், அது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கும், மாணவர்களின் நலனுக்கும் பாதகமாக அமையும் என திமுக சார்பாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது. எனவே, இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, பழைய மனு திரும்பப் பெறப்பட்டு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்காக பழைய மனு திருப்பப் பெறப்பட்டதற்கு எதிராகவே விமர்சனம் எழுந்தது.

மருத்துவம்

புதிய மனு தாக்கல்!

“மத்திய அரசு அமல்படுத்திய, “தேசிய மருத்துவ ஆணையச் சட்டம்” (2019) –ன் பிரிவு 14,  இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையச் சட்டம் (2020)  மற்றும் தேசிய ஹோமியோபதிச் சட்டம் (2020) தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி விதிமுறைகளுக்கு எதிராகவும், மாநில கூட்டாட்சிக் கொள்கைகளை மீறுவதாலும், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிராக உள்ளது.  இந்த அடிப்படையில் புதிய வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.  ஏற்கனவே தவறான சட்ட அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் வழக்கினை திமுக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

நீட் தேர்வு

மத்திய அரசின் பாதகமான சட்டவிதிகளை எதிர்த்து தொடர்ந்திருக்கும் இந்த வழக்கு நிச்சயம் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மாநில உரிமைகளை மீட்டெடுக்கும்” என திமுகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர்.ரவீந்திரநாத், “சட்டப்படி தமிழக அரசு சார்பாக தொடுக்கப்பட்டிருக்கும் புதிய மனு நியாமான கோரிக்கையை கூர்மையான சட்ட விதிகளின் அடிப்படையில் தான் தொடுக்கப்பட்டுள்ளது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. சில நீதிபதிகள் சந்தர்பத்திற்கு ஏற்ற மாதிரியும் அரசியல் காரணங்களுக்காகவும் தீர்ப்பில் வேறுபடுகின்றனர்.

உச்சநீதிமன்றம்

அதேபோல், நீட் தேர்வுக்கு ஆதரவாகவே உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், மருத்துவ நுழைவு தேர்வைக் கொண்டு வர தொடக்கப்புள்ளியாக இருந்ததே உச்ச நீதிமன்றம் தான். மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி இருக்க வேண்டுமென மாநில அரசு திட்டமிடுகிறது. ஆனால், அதை மதிக்காமல் மத்திய அரசு நீட்டை திணிக்க முடிகிறது. இப்படி கூட்டாச்சிக்கு எதிராக நடப்பது சட்டத்துக்கு எதிரானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம்.

மருத்துவர் ரவீந்திரநாத்

ஒருவேளை, `நீதிமன்றம் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பை வழக்கினாலும் மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளுமா?’ என்னும் கேள்வி எழுகிறது. அப்படி தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், அப்போது சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து தீர்ப்பை நீர்த்த போகும் நடவடிக்கையை மத்திய அரசு செய்யும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இது உடனடியாக தீர்வு கிடைக்குமா? என்பதை நம்மால் கணிக்க முடியாது. எனவே தொடர் போராட்டங்களை அரசு நடத்த வேண்டியிருக்கும்,” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.