மோமோ ட்வின்ஸ்: அமெரிக்காவில் நடந்த அதிசயம்… அடுத்தடுத்து பிறந்த இரட்டை குழந்தைகள்!

அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தை சேர்ந்த தம்பதி பிராங்கி ஆல்பா மற்றும் பிரிட்னி. இவர்களுக்கு ஓராண்டிற்கு முன்பு Identical Twins எனப்படும் ஒரே மாதிரி உருவம் கொண்ட இரட்டை குழந்தைகள் பிறந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு லெவி (Levi), லூகா (Luka) என்று பெயர் வைத்துள்ளனர். இந்த சூழலில் பிரிட்னி மீண்டும் கர்ப்பமாகி உள்ளார்.

இரட்டை குழந்தைகள்

மூன்றாவது குழந்தை பிறக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்துள்ளனர். மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் மீண்டும் இரட்டை குழந்தைகள் பிறக்கவுள்ளது தெரிந்தது. ஆனால் மிகப்பெரிய சிக்கல் இருப்பது பின்னர் தான் தெரியவந்தது. இரண்டாவது முறை கருவில் உருவாகியுள்ள இரட்டை குழந்தைகள் MoMo Twins என்ற வகையை சேர்ந்தவர்கள்.

10 லட்சம் திபெத் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த சீனா; ஐநா குற்றச்சாட்டு.!

மோமோ ட்வின்ஸ்

இதற்கு மோனோ ஆம்னியாடிக் – மோனோகுரோனிக் ட்வின்ஸ் என்று அர்த்தம். அதாவது, பனிக்குடம் மற்றும் நஞ்சுக்கொடி ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளும் இரட்டை குழந்தைகள். இது மிகவும் அரிதான பிறப்பு. அதுமட்டுமின்றி கரு தானாக களைய, குறைப் பிரசவத்தில் பிறக்க, குழந்தை இறந்து பிறப்பது போன்ற சிக்கல்கள் இருக்கின்றன. இதற்கிடையில் இரட்டை குழந்தைக்கு தண்டு வடத்தில் சிக்கல் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மிகவும் ஆபத்தான பிரசவம்

இதன் காரணமாக 24வது வாரத்திலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து பிரிட்னி தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். மோமோ ட்வின்ஸ் குழந்தைகளை பெற்றெடுப்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல என்கின்றனர். மிகவும் சவாலான மற்றும் ஆபத்தான சூழலை தைரியமாக சமாளித்து வர வேண்டும். எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் எதிர்பாராத நிகழ்வுகள் ஏதாவது அரங்கேறி உலுக்கி எடுத்து விடும்.

அரிதான நிகழ்வு

இருப்பினும் பிராங்கி ஆல்பா, பிரிட்னி தம்பதி நம்பிக்கையுடன் பிரசவத்திற்கு தயாராகி வந்தனர். இந்நிலையில் சிசேரியன் மூலம் இரட்டை குழந்தைகள் சமீபத்தில் பிறந்துள்ளன. தற்போது இரண்டு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து இரட்டை குழந்தைகள் பெற்றெடுப்பது அரிதான நிகழ்வு எனச் சொல்லப்படுகிறது.

அமெரிக்கா விசா பெறுவதில் மாற்றம்; இந்திய மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.!

மருத்துவர்கள் கண்காணிப்பு

இந்த குழந்தைகளுக்கு லைடியா (Lydia), லைன்லீ (Lynlee) எனப் பெயரிட்டுள்ளனர். குழந்தைகள் பிறந்து இரண்டு மாதங்கள் வரை மருத்துவமனையிலேயே இருந்துள்ளனர். இரட்டை குழந்தைகள் நலமுடன் இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுகுறித்து பிரிட்னி கூறுகையில், மருத்துமனையில் தொடர்ந்து இருந்ததால் என்ன நடக்குமோ என்ற பதற்றம் இருந்தது.

மகிழ்ச்சியில் தம்பதி

ஆனால் நல்லபடியாக எல்லாம் நடந்திருக்கிறது. எங்கள் வாழ்வின் மிகவும் சவாலான காலகட்டத்தை கடந்து வந்துள்ளோம். எங்கள் குடும்பம் பெரிதாகி விட்டது. தற்போது நாங்கள் 6 பேர். எங்கள் குடும்பத்தை மிகவும் நேசிக்கிறேன். இனி ஒவ்வொரு விஷயத்தையும் கொண்டாடி தீர்ப்போம். எங்கள் குழந்தைகளை நல்லபடியாக பார்த்து கொள்வோம் என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.