அக்ஷய் குமாரின் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘செல்ஃபி’. இப்படம் மலையாளத்தில் பிரித்விராஜ் வெளியான ‘டிரைவிங் லைசன்ஸ்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். ராஜ் மேத்தா இயக்கிய இத்திரைப்படத்தில் இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மலையாளத்தில் வசூல் சாதனை படைத்த இப்படம், பாலிவுட்டிலும் வசூல் சாதனை படைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்த நிலையில் படம் ரிலீஸாகி மோசமான வசூலை ஈட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் வெளியான இப்படம் முதல் நாளில் இரண்டரை கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கின்றது.
பாலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமாரின் படங்கள் சமீப காலமாகவே தொடர் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. ‘பச்சன் பாண்டே’, ‘சாம்ராட் பிருத்விராஜ்’, ‘பெல்பாட்டம்’, ‘ரக்ஷா பந்தன்’, ‘கட்புட்லி’ உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்தன.
இந்நிலையில் ‘செல்ஃபி’ படமாவது நல்ல வரவேற்பைப் பெரும் என்று எதிர்பார்த்த நிலையில் முதல் நாள் வசூல் படுமோசமாகவே இருந்திருக்கிறது. இதனால் அக்ஷய் குமார் கதைகளில் கவனம் செலுத்தி படங்களைச் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.