உதயநிதி ஸ்டாலின் டெல்லி பயணம்; பெரியார் பாலிடிக்ஸ் டூ பாஜக டீலிங் வரை!

தமிழ்நாட்டில் முதல்வர்
மு.க.ஸ்டாலின்
தலைமையில்
திமுக
ஆட்சி அமைந்து 20 மாதங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறையினருடன் பிணைப்பை ஏற்படுத்தி கொள்ளும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து விளையாட்டுத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டார்.

ஒடிசா பயணம்

ஒடிசாவில் நடந்த உலகக்கோப்பை ஹாக்கி தொடரை நேரில் பார்வையிட்டார். அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடன் சந்திப்பை நிகழ்த்தினார். ஒடிசாவில் சர்வதேச அளவிலான விளையாட்டு அரங்குகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். இதுதொடர்பான அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார். இதற்கிடையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்.

மத்திய அமைச்சர்கள் உடன் சந்திப்பு

இந்நிலையில் நாளைய தினம் (பிப்ரவரி 27) டெல்லி புறப்பட்டு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 28ஆம் தேதி மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது துறை சார்ந்த சில கோரிக்கைகளை முன்வைக்க இருப்பதாக தெரிகிறது. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடர் நடத்தி பெரிதும் கவனம் ஈர்க்கப்பட்டது.

சர்வதேச போட்டிகள்

இதேபோல் சர்வதேச அளவிலான போட்டிகளை சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக
உதயநிதி ஸ்டாலின்
கட்சி மற்றும் ஆட்சியில் முன்னிறுத்தப்பட்டு வருகிறார். எனவே டெல்லி அளவில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்ளும் வாய்ப்பாக அமையட்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தி அனுப்பி இருக்கலாம் என்கின்றனர்.

ஏபிவிபி தாக்குதல்

டெல்லியில் திமுகவின் செல்வாக்கு மிகுந்த தலைவராக
டி.ஆர்.பாலு
இருந்து வருகிறார். இவரது உதவியுடன் மத்திய அரசு தரப்பிடம் உதயநிதி ஸ்டாலின் அரசியல் ரீதியாக அணுகவும் திட்டமிடப்பட்டிருக்கலாம். சமீபத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

அரசியல் கட்சிகள் கண்டனம்

மேலும் கார்ல் மார்க்ஸ், லெனின், பெரியார் ஆகியோரின் படங்களையும் உடைத்து சேதப்படுத்தினர். இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களுடன் வீடியோ காலில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திமுக துணை நிற்கும் என்ற நம்பிக்கையை அளித்தார். டெல்லி வரும் போது நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பெரியார் பற்றிய கருத்தரங்கு

அதுமட்டுமின்றி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், விரைவில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கு மற்றும் பரப்புரை தொடங்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்தும் உதயநிதி ஸ்டாலினின் டெல்லி பயணத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர வேறு சில அரசியல் கணக்குகளும் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.