குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை | யாருக்கு? எப்படி? எப்போது?! 

திமுகவின் தேர்தல் வாக்குறுதி படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்த எந்த அறிவிப்பும் இடைத்தேர்தலுக்கு முன் சரியாக வரவில்லை.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த அதிமுக, பாஜக ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் வெளுத்து வாங்கின. மக்களிடமும் கடும் அதிருப்தி நிலவியது.

இதனை அறிந்த திமுகவின் தலைமை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வேறு வழியில்லாமல் நேற்றைய தேர்தல் பிரச்சாரத்தின்போதே வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

இது தேர்தல் விதிமுறை மீறல் என்று அதிமுக குற்றஞ்சாட்டிய நிலையில், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்த. 

இந்நிலையில். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை யாருக்கு? எப்படி? எப்போது? என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 

* தமிழக சட்டசபையில் வருகிற மார்ச் தாக்கலாகும் பட்ஜெட்டில் இது பற்றிய அறிவிப்பு இடம் பெரும்.
* திட்டத்தின் பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் நிதித்துறை மற்றும் வருவாய்த் துறை பணி.

* வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்க அரசு திட்டம்
* பி.எச்.எச். என்ற வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கும், 
* பி.எச்.எச்.ஏ.ஏ.ஒய். என்ற அந்த்யோ தயா அன்னயோஜனா ரேசன் அட்டை வைத்திருக்கும் (அதாவது 35 கிலோஅரிசி வாங்குபவர்கள்) 

* வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானம் கணக்கிடவும் வாய்ப்பு
* அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்துக்கு இந்த 1000 ரூபாய் பணம் வழங்கப்படாது. 
* புதுமைப் பெண் திட்டத்தில் பயன் அடையும் கல்லூரி மாணவிகளில் வறுமைக் கோட்டு கீழ் உள்ள தாயார்கள் இதில் பயன் அடைய வாய்ப்பு 
* 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் உதவித்தொகை வழங்குவதில் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 
* குடும்பத் தலைவிகளுக்கு தான் உரிமைத் தொகை என்பதால் ரேசன் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை. 
* தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் பணம் சென்றடையும்
 

கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.